சிறுத்தை சிவா இயக்கத்துல சூர்யா நடிச்சு வெளியாகியிருக்க கங்குவா படம் பாத்துட்டு வந்தாச்சு. போலீஸாலயே பார்க்க முடியாத வேலைகள பார்க்குற பவுண்டி ஹண்டர்களா வர்றாங்க சூர்யா, யோகிபாபு, திஷா பதானி மற்றும் ரெடின் கிங்ஸ்லி. ஒரு அசைன்மண்ட்காக கோவா போற சூரியாவ ஒரு பையன் பார்த்து சூர்யாவ பின் தொடர்ந்து வர்றான். 2024ல சூர்யாகூட வரும் அந்த பையனுக்கும் 1000 வருஷத்துக்கு முன்னாடி பாரதம்னு சொல்லப்படுற பகுதிக்கு பக்கத்துல இருக்கிற ஐந்தீவுல நடக்குற கதையில வர்ற பையனுக்கும் என்ன தொடர்பு, இப்போ அந்த பையன தேடுற கும்பல் யாருங்குறத கேள்விகளுக்கான பதில் தான் கங்குவா.ஹிஸ்டாரிகல் பகுதியில இந்திய நிலப்பரப்புக்கு பக்கத்துல இருக்க தீவுகள், அதுல 5 இன குழுக்களா பிரிஞ்சு வாழும் மக்கள், அவங்களுக்குள்ள நடக்குற சண்ட, அதுல ஒரு பகுதி மக்கள் 5 நில பரப்பு மக்களும் நல்லா வாழணும்னு நினைக்குறதுனு ஹிஸ்டாரிக்கல் ரெபரன்ஸ்களோட களமிறங்கி இருக்காரு இயக்குனர் சிவா. அதோட இல்லாம டயலாக்குகள் மூலமாவும் கருத்து சொல்லியிருக்காரு சிவா.ஹிஸ்டாரிகல் போர்ஷன்ல கிராபிக்ஸ் காட்சிகள் மிரள வைக்குது. வி.எஃப்.எக்ஸ் டீமோட வேலை மிரட்டியிருக்கு. 3டி காட்சிகள் ரொம்ப நாளைக்கு அப்பறம் தமிழ்ல ரசிக்கும்படியான எக்ஸ்பீரியன்ஸுக்கு கூட்டிட்டு போகுது. ஆர்ட் ஒர்க்ஸ், எடிட்டிங், ஒளிப்பதிவுனு டெக்னிக்கல் ஏரியக்கள்ல நெருப்ப கக்கியிருக்கு கங்குவா.நட்டி, கருணாஸ் உள்ளிட்ட வரலாறு பார்ட்ல வர்ற கதாபாத்திரங்கள் தங்களோட வேலைய சரியா செஞ்சிருக்காங்க. இசைல அங்க அங்க சில படங்கள் நினைவுக்கு வந்தாலும் காட்சிகள நியாயப்படுத்தின எடத்துல டி.எஸ்.பி பாஸ் ஆகியிருக்காரு.வரலாற்று போர்ஷனையே முழுசா எடுத்திருக்கலாமோ அப்படிங்குற அளவுக்கு 2024 போர்ஷன் ரொம்ப சுமாரா இருக்கறதும், மறுபடியும் 7ம் அறிவு, புலி வாசனை படத்துல வீசுறதையும் தவிர்த்திருக்கலாம். குறிப்பா படத்தோட முதல் 20 நிமிஷம் வர்ற காட்சிகள் படத்துக்கு பெரிய மைனஸா அமைஞ்சிருக்கு. அது 2024 போர்ஷனை தவிர்த்திருந்தா திரைக்கதை சுவாரஸ்யமா இருந்திருக்கும்னு அப்படிம்னு ஆடியன்ஸ்க்கு தோணவைக்கிது. ஹிஸ்டாரிகல் போர்ஷன்ல கங்குவாவ வர்ற சூர்யாவின் காட்சிகள கம்பேர் பண்றப்ப கரண்ட்ல ஃப்ரான்ஸிஸா சூர்யா வர்ற காட்சிகள் படத்தோட ஒட்டல. இன்னும் சொல்லணும்னா, 2024ல நடக்குற கதையில கதாப்பாத்திரங்கள் சரியா வடிவமைக்கப்படல. எமோஷன், ஆக்சன், பீரியட், சயின்ஸ்னு கொஞ்சம் மிக்ஸ்டா கொடுக்க முயற்சி செஞ்சு முழுசா கொடுக்க முடியாம தடுமாறியிருக்காரு இயக்குனர் சிவா.சர்ப்ரைஸ் கேமியோ, இரண்டாம் பாகத்துக்கான லீட் எல்லாமே முடிஞ்ச கதைய அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போற வேலைய செஞ்சிருக்கு. மொத்தத்துல கங்குவா கொஞ்சம் நெருப்பா எரிஞ்சிருக்கலாம்.