குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற லேசர் ஷோ பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தது. 'கங்காரியா கார்னிவல் 2024' (( 'Kankaria Carnival 2024' )) என்ற பெயரில் நடைபெற்ற லேசர் ஷோ நிகழ்ச்சியை அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்தார். பல வண்ணங்களில் மாய ஜாலம் காட்டிய லேசர் ஷோ நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்து செல்போன்களில் வீடியோ எடுத்து கொண்டனர்.