கும்பமேளாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நதிக்கரையில் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற கங்கா ஆரத்தியில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். இந்த ஆரத்தி ஜனவரி 11 முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மகா கும்பத்தின்போதும் நடத்தப்படும் எனவும், இதை கண்டுகளிக்க அனைவரையும் வரவேற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.