கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டியின் 10 வது நாளில் ஆராட்டு விழா நடைபெற்றது. மயிலாடி புத்தனாறு கால்வாயில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆராட்டு விழாவில் திரளான முருக பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.