தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மறைந்த வெள்ளையன் உடலுக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்பி துரை வைகோ, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில துணை தலைவர் கரு நாகராஜன் ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.