தமிழகத்தில் மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் தற்போது திமுக - பாஜக இடையிலான மோதலாக மாறியுள்ளது... மத்திய அரசு நிதி ஒதுக்கியதற்கு யார் காரணம் என இருக்கட்சியினரும் தற்போது வார்த்தை மோதல்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.சென்னையில் மெட்ரோ 2-ம் கட்ட பணிகள் கடந்த 2016ல் தொடங்கியது . மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் தொடங்கிய இந்த பணிக்கு மத்திய அரசு நிதியை காலதாமதபடுத்தியதால் பணிகள் ஆங்காங்கே தடை பட்டன... மாநில அரசும் மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி வழங்குகள் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது... அரசியல் மேடைகளில் கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தொடர்ந்து பேசி வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...கடந்த 27-ம் தேதியன்று பிரதமரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார்.. அதில் முக்கியமான ஒன்று மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது...இந்த நிலையில் தான் இதுவரை மெட்ரோ 2-ம் கட்ட பணிகள் குறித்து பேசாத பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். அண்ணாமலை கடிதம் எழுதிய மறுநாளே மத்திய அரசு நிதியை ஒதுக்க தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியது... தமிழக அரசின் தொடர் வலியுறுத்தல்களே மத்திய அரசு நிதி ஒதுக்க காரணம் என திமுகவினரும், அண்ணாமலை கடிதம் எழுதிய பின்னர் தான் நிதி ஒதுக்கப்பட்டது என பாஜகவினரும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டனர்... தமிழக பாஜகவினர் என்ற ஹேஷ்டேக்கில் கருத்துக்களை பதிவிட, அதற்கு திமுகவினரும் பதிலடி கொடுக்க சமூகவலைதளங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்தன... நிதி ஒதுக்கும் முன்னர் அண்ணாமலையை விடுத்து கடிதம் எழுத கூறி விட்டு பாஜக ஆதாயம் தேடுவதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்...இந்த விவாதங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் புதிய சர்ச்சையை கிளப்பினார் பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா.... மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு 63 ஆயிரம் கோடியை ஒதுக்கியதாக அவர் பதிவிட, அதனை பின்பற்றி பாஜகவினர் பலரும் 63 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என பதிவிட ஆரம்பித்தனர்...இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு என விளக்கம் அளிக்கப்பட்டது... அதில் மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக மத்திய அரசு கொடுத்தது 7425 கோடி ரூபாய் என்றும் தமிழக அரசின் பங்களிப்பு 22228 கோடி ரூபாய் என்றும் தமிழக அரசின் உத்தரவாதத்துடன் கடன் பெறும் நிதி 33593 கோடி ரூபாய் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.. மெட்ரோ 2-ம் கட்ட பணிகளின் ஒட்டு மொத்த மதிப்பு தான் 63246 கோடி ரூபாய் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது...