இந்தியாவின் ஈடுஇணையற்ற தொழிலதிபர் ரத்தன் டாடா தன்னுடைய 86வது வயதில் மறைந்தார். இந்தியாவில் டாடா குரூப் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்த ரத்தன் டாடா.ஆறு கண்டங்களில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் செழித்து தழைத்தோங்கி பரந்து விரிந்திருக்கும் தொழில் சாம்ராஜ்ஜியம் தான் டாடா நிறுவனம் .! இந்திய தொழில்துறையில் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியதன் மூலம் இந்தியாவின் அடையாளமாகவே திகழ்ந்தார் ரத்தன் டாடா. உப்பில் தொடங்கி விமான சேவை வரை டாடா முத்திரைப்பதிக்காத துறைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.! 1868ம் ஆண்டு ஒரு சாதாரண வர்த்தக நிறுவனமாக தொடங்கப்பட்டு பின் தொழில்துறையின் தவிர்க்கவே முடியாத கௌரவமாக உருவெடுத்த டாடா குழுமத்தின் நிறுவனரான ஜாம்செட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன் தான் ரத்தன் டாடா.! செல்வ சீமான்களின் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை BORN WITH SILVER SPOON என வர்ணிப்பது உண்டு. அப்படியொரு குடும்பத்தில் பிறந்தாலும் எந்தவித அதிகார தோரணையும் இல்லாமல் எளிமையான வாழ்க்கை முறையையே தனது இறுதி நாள் வரை கடைப்பிடித்து வந்தார் ரத்தன் டாடா.!1962 இல் தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அன்று முதல் டாடா குழுமம் மட்டுமின்றி இந்திய பொருளாதாரத்துக்கே ஏறுமுகம் என்று தான் சொல்ல வேண்டும். பல அயல்நாட்டு நிறுவனங்களை யெல்லாம் வாங்கி குவித்து தொழில் சாஜ்ராஜ்ஜியத்தை கடல் கடந்து கொடி நாட்டினார்... 2000 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் தேயிலை நிறுவனமான டெட்லி டீ ((Tetley Tea)) நிறுவனத்தை கையப்படுத்தியது டாடா. அதன் பின்னர் 2004ம் ஆண்டு தென் கொரியாவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான Daewoo Motors' truck manufacturing நிறுவனத்தை வாங்கியது . இதையடுத்து 2007ம் ஆண்டு Anglo-Dutch ஸ்டீல் நிறுவனமான Corus குழுமத்தை டாடா தன்வசப்படுத்தியது. ஸ்டீல் தயாரிப்பில் உலகளவில் மிகப்பெரிய நிறுவனமாக பார்க்கப்பட்ட Corus குழுமத்தை வாங்கியது டாடா குழுமத்தின் மணிமகுடமாகவே பாராட்டப்பட்டது. இதன் மூலம் உலகளவில் 5-வது பெரிய ஸ்டீல் தயாரிப்பாளராக உருவெடுத்தது டாடா. பயணிகள் கார் தயாரிப்பிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்ற முயற்சியில் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இன்டிகா மாடலை 90-களின் பிற்பகுதியில் வெளியிட்டிருந்தது டாடா மோட்டார்ஸ். எதிர்மறை விமர்சனங்களால் தோல்வியை சந்திக்க அப்போது கார்கள் உற்பத்தியில் கொடி கட்டி பறந்த FORD நிறுவனத்திடம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விவரம் தெரியாமல் தெழிலில் இறங்கி சூடுபட்டதாக ரத்தன் டாடா-வை FORD நிறுவனர்கள் ஏளனம் செய்ததாக கூறப்பட்டது. அதன் பின், தன் முடிவில் இருந்து பின் வாங்கிய டாடா பெரும் பாடுபட்டு குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து அதே கார் உற்பத்தியில் தனக்கென தனி இடம் பிடித்ததார். ஆனால் விதியின் விளையாட்டால் ஜாகுவார், லேண்டு ரோவர் கார்களை சந்தைப்படுத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த FORD நிறுவனம் இரண்டையும் வாங்கிக்கொள்ளுமாறு டாடா-வின் வாசலை தேடி வந்தது. ஆனால் எந்தவித பகையும் காட்டாமல் அந்நிறுவனங்களை வாங்கிக்கொண்டார் டாடா குழுமத்தின் ரத்தன் டாடா... இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியம் இருந்தும் எந்தவித ஆடம்பரமோ, பகட்டோ இல்லாமல் சாதாரண மக்களும் அணுகக் கூடியவராக எளிய மனிதராகவே திகழ்ந்தார் ரத்தன் டாடா.! A கிளாஸ் வாழ்க்கையை எளிய மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் உன்னத நோக்கமே டாடா நானோ கார் உதயமாக மிக முக்கிய காரணம்... குடும்பத்தோடு காரில் பயணிப்பது என்பது சாதாரண மிடில் கிளாஸ் மக்களின் கனவாகவே இருந்தவந்த காலக்கட்டத்தில் ஒரு லட்சம் ரூபாயில் நானோ காரை அறிமுகம் செய்து கார் உற்பத்தியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தினார் ரத்தன் டாடா.!லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஹைடெக் மாலில் ஏசி SHOWROOM-ல் SHOPPING செய்யும் அனுபவத்தை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற டாடாவின் ஊந்துதல் தான் ZUDIO... இப்படி டாடாவின் சாம்ராஜ்ஜியத்தை இன்னும் எராளமாக சொல்லிக்கொண்டே போகலாம்... என்னதான் லாபத்தை நோக்கமாக கொண்ட தொழிலதிபராக இருந்தாலும் தொழில் தர்மத்தை சிரம் மேல் சுமந்ததாலோ என்னவோ இன்றளவும் டாடா நிறுவன தயாரிப்புகளுக்கு மக்களிடையே தனி மவுசு உண்டு.