எத்தனையோ திறமையான ஆர்டிஸ்ட்களுக்கு சினிமா இண்டஸ்ட்ரில தொடர்ச்சியா வாய்ப்பு கிடைக்குறது இல்லை. அட்டக்கத்தி தினேஷ் நடிப்புல எந்த குறையும் சொல்ல முடியாது. கதைக்கு ஏத்த மாதிரி நடிப்பை கொடுக்குற திறமையான ஒரு ஆர்டிஸ்ட். ஆனால் அப்படிப்பட்ட தினேஷ்க்கு வாய்ப்புகள் கிடைக்குறது கம்மியாகி இருந்துச்சு. ஆனால் மறுபடியும் தான் யாருண்ணு நிரூபிக்குற விதமாக இப்போ லப்பர் பந்து ன்ற படம் மூலமா ரசிகர்கள் கிட்ட இருந்து நிறையவே பாராட்ட அள்ளிட்டு இருக்காரு தினேஷ்.செப்டம்பர் 27 அட்டக்கத்தி தினேஷோட பிறந்த நாள். மத்த பிறந்த நாளையெல்லாம் விட இந்த பிறந்த நாள் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, லப்பர் பந்து படத்துல ஒரு விஜயகாந்து ரசிகனா, கிரிக்கெட் கிரவுண்டுக்குள்ள தினேஷ் இறங்குனாலே “ நீ பொட்டு வச்ச தங்கக்குடம் ஊருக்கு நீ மகுடம்” பாட்டு போடுவாங்க. லப்பர் பந்து படத்தோட BLOCK BUSTER வெற்றிக்குப் பிறகு இனி சினிமா கேரியர்ல அட்டக்கத்தி தினேஷ்க்கு ” நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி “ பாட்டுதான் கேக்கும்.இதுவரை அட்டக்கத்தி தினேஷ் 20 க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருக்காரு. அவர் ஹீரோவா நடிச்ச படங்கள்ல எந்தெந்த படங்கள் மறக்க முடியாத வெற்றிப்படமா அமைஞ்சதுண்ணு கொஞ்சம் விரிவா பார்க்கலாம். 2012 -ல பா. ரஞ்சித் இயக்கத்தில முதல்முறையா தினேஷ் ஹீரோவா நடித்த படம் தான் அட்டகத்தி. இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமா இருந்தாலும் சிறந்த கதை, நல்ல நடிகர் ன்ற அளவுக்கு மக்கள்கிட்ட தினேஷ்க்கு மிகப்பெரிய வரவேற்பு கெடச்சது. அதன் பிறகு அட்டக்கத்தி தினேஷாவே மாறிப்போனாரு. ராஜூமுருகன் இயக்கத்தில் 2014-ல தினேஷ் மற்றும் மாளவிகா நாயர் நடிப்பில குக்கூ படம் வெளியாச்சு. பார்வையற்ற ஜோடியா நடிச்ச இவங்க இரண்டு பேரோட நடிப்பும் ரொம்பவே பாராட்டப்பட்டுச்சு. குறிப்பா தினேஷ் நிறையவே APPLAUSE -ஐ அள்ளீருந்தாரு. நல்ல விமர்சனங்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் குக்கூ வெற்றிப்படமா அமைஞ்சது.வெற்றிமாறன் இயக்கத்தில 2015 வது வருசம் அட்டகத்தி தினேஷ், முருகதாஸ், சமுத்திரக்கனி நடிப்பில விசாரணை திரைப்படம் வெளியாச்சு. அதிகார வர்க்கத்தோட அடையாளமா இருக்குற காவல்துறையின் மனசாட்சியை குறுக்கு விசாரணை செய்யும் தமிழ் சினிமாவின் பெருமித படைப்பா இந்தப் படம் நின்னு பேசும் அளவுக்கு வெற்றி கெடச்சது. நீதிமன்றத்தில் தினேஷ் பேசும் வசனங்கள் பாராட்டப்பட்டுச்சு.அதியன் அதிரை இயக்கத்தில் 2019-ல தினேஷ், ஆனந்தி நடிப்பில இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் வெளியாச்சு. இரண்டாம் உலகப் போரில் மிச்சமான ஒன்று இன்றைய தமிழகத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்துது என்பதைத்தான் படம் பேசுச்சு. ஒரு லாரி டிரைவரா அட்டகாசமான நடிப்பை தினேஷ் வெளிப்படுத்தி இருப்பாரு. சுரேஷ் மாரி இயக்கத்தில இந்த வருசம் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன் நடிப்பில் J பேபி படம் வெளியாச்சு. ஐந்து பிள்ளைகளைப் பெத்து வளத்து திடீரென கணவரோட இழப்பை சந்திக்கும் ஒரு பெண், அவரோட இரண்டாம் பாதியில, பிள்ளைகளோட அலைக்கழிப்பால ஏற்பட்ற கஷ்டங்களை காட்டுற விதமா படம் பார்ப்பவர்களை கண்ணீரில் கரைய வைத்தது.இப்போதைக்கு தமிழரசன் இயக்கத்தில லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடிச்சிருக்கு. இதில் அட்டக்கத்தி தினேஷ்,ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிச்சிருக்காங்க. 40 வயசிலயும் வெறித்தனமா கிரிக்கெட் விளையாடுறதும், அதில் ஒரு காதல் உணர்வை கொண்டு வந்து அதன் மூலம் வரும் பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாவும் அட்டக்கத்தி தினேஷ் ரொம்பவே பிரம்மாதமான நடிப்பை வெளிப்படுத்தீருக்காரு. படம் மக்களோட ஆதரவுல பட்டய கிளப்பிட்டு இருக்கு. இப்படி திருடன் போலீஸ், ஒருநாள் கூத்து, அண்ணனுக்கு ஜே, போன்ற 20 க்கும் மேற்பட்ட படங்கள்லயும் தன்னோட சிறப்பான நடிப்பை அட்டக்கத்தி தினேஷ் வெளிப்படுத்தீருப்பாரு. லப்பர் பந்துக்கு பிறகு அட்டக்கத்தி தினேஷின் சினிமா வாழ்க்கையில் அடுத்தடுத்து பல சிக்சர்கள் காத்திருக்கு. ரெண்டு தென்னை மரத்துக்கு மேல சிக்ஸர தூக்கி அடிக்கிற இந்த கெத்துவோட காட்டுல இனி எப்பவுமே வெற்றிக்கொடி பறக்கட்டும்.