சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் நான்கு பள்ளிகளில் மாணவர்களின் மொழி திறமையை மேம்படுத்தும் விதமாக பிரெஞ்சு மொழி கற்று தரப்படுகிறது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 20 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பிரெஞ்சு மொழிஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. 80 மணி நேர பயிற்சி வகுப்புகளுக்கு பிறகு பிரெஞ்சு மொழியில் பேசுதல், படித்தல், எழுதுதல் உள்ளிட்டவைகளை மாணவ, மாணவிகள் எளிதாக மேற்கொள்ள முடியும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.