ஜார்க்கண்டில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு ரயில்களின் ஓட்டுநர்களும் உயிரிழந்தனர். பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர். ரயில்வே லைனில் அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில், ரயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ரெயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.