ஃப்ரீ ஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் டூர் போட்டியில் உலக சாம்பியனான தமிழகத்தைச் சேர்ந்த குகேஷை, உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வீழ்த்தினார். உலகின் தலைசிறந்த 10 செஸ் வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஃப்ரீ ஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் டூர் ஸ்டேஜ் 1 போட்டிகள், ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்று வருகின்றன.