70 வயது மற்றும் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு 5 லட்ச ரூபாய் இலவச சுகாதாரக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘AB PM-JAY’ திட்டத்தின் கீழ், ஓர் ஆண்டுக்கு 5 லட்சத்துக்கான சுகாதாரக் காப்பீடு மூலம், சுமார் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவர் என மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குப் புது காப்பீடு அட்டைகளும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற தனியார் காப்பீடு, இஎஸ்ஐ திட்டத்தில் சுகாதார காப்பீடு எடுத்துக் கொண்டுள்ள 70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.