திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில் 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு உள்ளிட்டவற்றை கலப்படம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜசேகரன் உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்தது.