தமிழ்நாட்டில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 815 பேருக்கு மட்டுமே எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்படவில்லை என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், விநியோகம் செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களில் 551 மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபாரில் இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், அதனை வரும் 14-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.