இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தற்போதைய பார்ம் குறித்து சமீபத்தில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு பாகிஸ்தான் முன்னாள் வேகபந்து வீச்சாளர் முகமது அமீர் பதிலடி கொடுத்துள்ளார். 3 வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி மகத்தான பேட்ஸ்மேன் என்றும் அவரை பாபர் அசாம், ஸ்டீவ் சுமித் போன்றோருடன் ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்தார்.