உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதலமைச்சர், சுந்தரம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.