மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பிஷ்னோய் கும்பலிடம் தொடர்புடையதாக ராய்கட் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.