டெல்லியில் வாக்காளர்களுக்கு பாஜக தங்க செயின் பரிசளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இரண்டு பகுதிகளில் பாஜக வாக்காளர்களுக்கு தங்க செயின் வழங்கியுள்ளதாகவும், விலைகொடுத்து மக்களின் வாக்குகளை வாங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார். எனவே, மக்கள் தங்கள் வாக்குகளை விற்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.