பணி ஓய்வு பெற்ற பின்னரும் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அரசு இல்லத்தை காலி செய்யாமல் இருப்பது குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உட்பட 33 நீதிபதிகள் உள்ளனர். இதில் நான்கு நீதிபதிகளுக்கு இன்னும் அரசு இல்லம் ஒதுக்கப்படாத நிலையில், கடந்த நவம்பரில் ஓய்வு பெற்ற டி.ஒய்.சந்திரசூட் தாம் வசித்து வந்த அரசு இல்லமான கிருஷ்ண மேனன் சாலை பங்களாவை இன்னும் காலி செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீதிபதி சந்திரசூட், வீட்டை காலி செய்ய தலைமை நீதிபதியிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.