வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையில், திமுகவினர் கைகாட்டும் வீடுகளுக்கு மட்டுமே படிவம் வழங்கப்படுவதாகவும், பொதுவெளியில் SIR-ஐ தடுக்க வேண்டும் என்று, திமுக நாடகமாடுவதாகவும் பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பதிலாக, திமுக நிர்வாகிகளே வீடு வீடாக சென்று படிவத்தை நிரப்பி வருவதாகவும், திமுக அதன் கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு மட்டுமே படிவங்களை வழங்குவதாகவும் புகார் தெரிவித்தார். SIR பணிகளை கண்காணிக்க தொகுதி வாரியாக வெளிமாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.