தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அடுத்து எழும்பூர் கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 21 கி.மி. தூரத்திற்கு, ரூ. 5,855 கோடி மதிப்பீட்டில்மதுரவாயில் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கட்டடக் கழிவுகள் கூவம் ஆற்றின் ஓரங்களில் கொட்டப்படுவதால்,பருவமழை நெருங்கும் நேரத்தில் ஆற்றின் நீடோட்டம் பாதிக்கும் என்பதால் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ததோடு, கட்டிட கழிவுகளை 10ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது.