நெதர்லாந்தில் கண்களை கவரும் வகையில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கியூகென்ஹோஃப் (( Keukenhof )) மலர் தோட்டத்தில் ஆயிரத்து 600 வகையை சேர்ந்த 70 லட்சம் மலர் செடிகள் நடப்படுகின்றன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடப்பட்ட செடிகள் அனைத்திலும் தற்போது பல வண்ண பூக்கள் பூத்து குலுங்குகின்றன.