சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் மலர்க்கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த மலர் கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுமார் 30 லட்சம் மலர்களை கொண்டு பிரம்மாண்டமாக யானை, முயல், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.