இத்தாலியின் மத்திய மற்றும் வடக்கு பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ரிமாஜியோ ஓடை நிரம்பி வழிந்ததன் காரணமாக, செஸ்டோ ஃபியோரெண்டினோ நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனால் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் நீந்தியபடி காணப்படுகின்றன.