மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.