வெள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 110 படகுகள் மூலம் உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இடைவிடா கனமழையால் வெள்ளக்காடான விஜயவாடா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.வெள்ளம் பாதித்த இடங்களில் கட்டுப்பாட்டு மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்