மெக்சிகோவில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முகாம்களில் பொதுமக்கள் தங்க தேவையான ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டு வருகின்றன.