நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்பை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், மணிமுத்தாறு அருவியில் வெள்ளிப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. புலிகள் கணக்கெடுப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை வன சோதனைச்சாவடி மூடப்பட்டுள்ளதால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.