தலைநகர் டெல்லியில் இடைவிடாது பெய்த கனமழையால் யமுனா நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் நிவாரண முகாம்களும் நீரில் மூழ்கின. தலைநகர் டெல்லியில், ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகள் வெள்ளத்தால் மிதக்கின்றன. பெல்லா சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் நீரில் மூழ்கின. மேலும், யமுனா பஜார் மற்றும் யமுனா காதர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Kashmere Gate-ல் பல பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில் Loha Pul பகுதிகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.