ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடர்மனா பஜாரில் செயல்பட்டு வந்த பட்டாசுக் கடையில், எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்துள்ளது. உடனே கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறின.