தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவை முறையாக அமைத்து தராத தமிழக அரசை கண்டித்து நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1500 மீன்பிடி படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திரேஸ்புரம் கடற்கரையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் தூண்டில் வளைவு பாதி அமைக்கப்பட்டுவிட்டு மீதமுள்ள பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.