தமிழத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி அடுத்த 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருகிறது. மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவு முதல் ஜீன் 15ஆம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக விசைப்படகுகளை பாதுகாப்பான முறையில் மீனவர்கள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.