கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், ஆழ்கடல் மீன் பிடிப்பின்போது, வலையில் சிக்கிய மீன் குஞ்சுகளை மீண்டும் கடலிலேயே விட்ட வீடியோ வெளியாகியுள்ளது.வலையில் சிக்கிய மீன் குஞ்சுகளை கரைக்கு கொண்டு சென்று அவற்றை வீணாக்காமல், மீண்டும் கடலிலேயே விட்ட கருநாகப்பள்ளி என்ற பகுதியை சேர்ந்த மீனவர்களின் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.உழைப்பு, பொருள் செலவு, வேலை நேரம் மற்றும் முதலீடு என, நீண்ட தூரம் பயணித்து மீன் பிடித்த நிலையில், கிடைத்த வரைக்கும் லாபம் என எண்ணாமல், இந்த மீனவர்களின் மனப்பான்மையை நாமும் பாராட்டுவோம்.