பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து வென்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2-வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இதனையடுத்து இன்று நடைபெற்ற 5வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 27.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது .