கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரராக லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனது கால்பந்து விளையாட்டு பயணத்தில் மெஸ்ஸி, மொத்தமாக 896 கோல்களை அடித்ததுடன், 404 கோல்களை அசிஸ்ட்டு செய்து அசத்தியுள்ளார். எம்எல்எஸ் தொடரில் சின்சினாட்டி அணிக்கு எதிரான போட்டியில், இன்டர் மியாமி அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, ஹாட்ரிக் அசிஸ்ட் செய்ததுடன், 1 கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதன் மூலமாக கோல்கள் பங்களிப்பில் 1,300 என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரராக வரலாறு படைத்துள்ளார்.