ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் உள்ள மேல் நிலை பள்ளிக்கூடத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.