மின்மினி பூச்சிகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வருவதால், அவற்றை காணும் கடைசி தலை முறையாக நாம் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரவில் ஒளிர விடப்படும் அதிக எண்ணிக்கையிலான மின் விளக்குகள் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கையை சீர்குலைக்கும் என கூறப்படுகிறது. மேலும் நகரமயமாதல், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் மின்மினி பூச்சிகளின் இனம் அழிந்து வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.