குஜராத் மாநிலம் சூரத் நகரில் கழிவு நீர் குழாயில் தவறி விழுந்த 2 வயது சிறுவனை பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர் ஒருவர் கழிவு நீர் குழாயிற்குள் சென்று திரும்பிய நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.