மலேசியாவின் சபா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. லிகாஸ் என்ற கிராமத்தில் காலை நேரத்தில் ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக மக்கள் அனைவரும் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.