ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 ரயில்களில் தீவிபத்து ஏற்பட்டு, பெட்டிகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராயலசீமா எக்ஸ்பிரஸ் மற்றும் சீரடி எக்ஸ்பிரஸ் ஆகியவை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நிலையில், முதலில் ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியதோடு, அருகில் நின்று கொண்டிருந்த சீரடி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.