மெக்சிகோவின் வடகிழக்கு நகரமான கார்சியாவில் உள்ள தொழிற்சாலைகள் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. தொழிற்சாலைகளில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, வானுயர கரும்புகை எழும்பியது. தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.