உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து சாம்பலாயின. மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கீதா பிரஸ் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட கூடாரங்கள் தீ பிடித்து எரிந்து கரும்புகை எழுந்தது.