ஆந்திராவில், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம், ராயாவரத்தில் ஸ்ரீ கணபதி பட்டாசு உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு அதிக அளவில் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. தீ விபத்தில் இருந்து தப்பிக்கவும் தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு மீட்பதற்குள் இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.