டெல்லியில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்ட நிலையில், அமைச்சர்களின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சராக பதவியேற்ற ரேகா குப்தா, நிதி மற்றும் வருவாய் துறையையும், பர்வேஷ் வர்மா நீர்வளம் மற்றும் பொதுப்பணித்துறையையும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. மஞ்சிந்தர் சிங் சிர்சாவுக்கு உணவுத்துறையும், கபில் மிஸ்ராவுக்கு சட்டத்துறையும், ஆஷிஷ் சூட்டிற்கு உள்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.