ஜனநாயகன் பட விவகாரத்தில் இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை என்றும், வாரிய தலைவர் தான் இறுதி முடிவு எடுப்பார் என்றும், தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.தணிக்கை சான்று - சிக்கிய ஜனநாயகன் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியுள்ளது. தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றத்தில், தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்ற தனி நீதிபதி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சான்று விவகாரம் - மேல்முறையீடுஇந்த வழக்கு இன்று ஜனவரி 20ஆம் தேதி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மண்டல சென்சார் போர்டில் யார் படத்தை பார்த்தார்கள்? படத்தை பார்த்து சட்டப்படி ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது?’ என நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது. தணிக்கை வாரியம் தரப்பில் கூறியதாவது: படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது. தணிக்கை வாரிய தலைவர் தான் இறுதி முடிவு எடுப்பார். படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க மும்பையில் உள்ள அதிகாரிகளுக்கே அதிகாரம். 14 காட்சிகளை நீக்கிய பின்னர் படத்தைப் பார்த்து முடிவெடுக்கப்படும் என கூறினோம். 14 காட்சிகளை நீக்கிவிட்டதால் தணிக்கைச் சான்று வழங்க கோரினர். இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர், படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.இதையும் பாருங்கள் - செப்டோ ஊழியருக்கு நேர்ந்த துயரம்