தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்வில், தரையில் மோதி போர் விமானம் வெடித்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக தென்னாப்பிரிக்க விமானி James O' Connell உயிரிழந்தார்.வானில் வட்டமடித்து கொண்டிருந்த போதே திடீரென கீழ் நோக்கி பாய்ந்து, தரையில் மோதி வெடித்த போர் விமானத்தின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.