ஹங்கேரியில் பால் புதுமையினரின் பிரைடு அணிவகுப்பு (( Pride march ban )) தடை செய்யப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பாலத்தின் மீது குவிந்ததால் போக்குவரத்து முடங்கியது. நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் பிரைடு அணிவகுப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், போராட்டக்காரர்கள் கையில் கொடி மற்றும் பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்று பாலத்தில் ஒன்று கூடினர்.