அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயின் காரணமாக அருகே வசிக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த காட்டுத் தீயால், லாஸ் ஏஞ்சல்ஸின் (( SAN BERNARDINO COUNTY)) கிழக்கே சான் பெர்னார்டினோ கவுண்டியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக கட்டடங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கட்டாய உத்தரவின் கீழ் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.