கொல்கத்தாவில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6வது நாளாக மருத்துவர்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவர்களில் அனிகேட் மஹடோ என்ற மருத்துவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.