திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேல்மாளிகைப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோபி என்ற விவசாயி, வேர்க்கடலை அறுவடை செய்யும் இயந்திரத்தை டிராக்டருடன் இணைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.